CaFFE - Campaign for Free and Fair Election
 

“ஜனனி” நிகழ்ச்சித்திட்டம் வவுனியாவில் இருந்து ஆரம்பிக்கிறது

News     February 10, 2022

வவுனியாவில் பிரதேச அரசியலில் பெண்களின் டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவிக்கும் ‘ஜனனி’ நிகழ்ச்சித்திட்டத்தை CaFFE அமைப்பு இன்று காலை ஆரம்பித்துள்ளது.

வவுனியா நெல்லி ஸ்டார் விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் பெருமளவானோர் கலந்துகொண்டனர். டிஜிட்டல் கல்வியறிவின் அவசியம் குறித்தும், ஊடகங்கள் முன் தோன்றுவது குறித்தும், செய்தியாளர் சந்திப்பு நடத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடகச் செயலாளர் மூத்த ஊடகவியலாளர் ஜெயரஞ்சன் யோகராஜ் அவர்கள் வளவாளராக கலந்து சிறப்பித்தார். வவுநியா மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ரதீஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர். கபே நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் டிஜிட்டல் கல்வியறிவின் அவசியத்தை விளக்கினார்.