பிரதேச அரசியலில் பெண்களின் டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவிக்கும் CaFFE இன் ‘ஜனனி’ நிகழ்ச்சி இன்று காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்.நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


டிஜிட்டல் கல்வியறிவின் அவசியம் குறித்தும், ஊடகங்களில் வெளிவருவது குறித்தும், செய்தியாளர் சந்திப்பு நடத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிறேஷ்ட ஊடகவியலாளர் ஜெயரஞ்சன் யோகராஜ், (புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடகச் செயலாளர்)
கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் ஆகியோர் டிஜிட்டல் கல்வியறிவின் அவசியம் குறித்துப் உரையாற்றினர்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடக செயலாளர் ஜெயரஞ்சன் யோகராஜ் அவர்களினால் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ளும் நடைமுறை பயிற்சியும் இந்த உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் திரு.எஸ்.மயூரன், கபேயின் முன்னாள் யாழ்.மாவட்ட இணைப்பாளர் எஸ்.பிரதாப், யாழ்.மாவட்ட கபே இணைப்பாளர் எஸ்.தினேஷ் மற்றும் ஆசிரியர் ஹரிஹரன் மற்றும் கபே அமைப்பின் கண்காணிப்பாளர் நேசன் புலேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

