பிரதேச அரசியலில் உள்ள பெண்களின் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தும் வகையில் CaFFE இன் ‘ஜனனி’ திட்டத்தின் திருகோணமலை மாவட்ட வேலைத்திட்டம் இன்று (25) திருகோணமலை உப்புவெளியில் உள்ள Green Garden ஹோட்டலில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
விடியல் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் றிப்தி அலி இந்த நிகழ்வில் வளவாளராக கலந்துகொண்டார்.
கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ், பிரதேச தலைவர்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவின் அவசியத்தை விளக்கினார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்
என். மணிவண்ணன் மற்றும் திருகோணமலை மாவட்ட பிரதி தேர்தல்கள் ஆணையாளர் திரு.எஸ்.சுதாஹரன் மற்றும் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். கபே திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் ஆர். எம்.ராபில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.







